தென்னாப்பிரிக்கா முதல் தென் குமரி வரை… காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்!

 #Gandhi150 தமிழ்மகன் தமிழர்களுக்கு காந்தியையும் காந்திக்குத் தமிழர்களையும் அளவுக்கு அதிகமாகவே பிடித்துப்போனது. தமிழில் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. காந்தி மகாத்மா காந்திக்கும் தமிழருக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அது, தென்னாப்பிரிக்காவில் காந்தி வக்கீல் தொழிலைத் தொடங்கிய காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது.  தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியபோது அவருக்கு உறுதுணையாக இருந்து, ஆங்கிலேயர்களின் அடாவடித்தனங்களை எதிர்த்து சிறை சென்று உயிர் மாய்ந்த மூவரில் ஒருவரை நம்மில் பலருக்கும் தெரியும்… அவர் தில்லையாடி வள்ளியம்மை.

புலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி!

ஞாயிறு, 29 ஜூலை 2018 சிவா 1970களில் கோடாலி, வெண்புறா, வெட்டுப்புலி ஆகிய மூன்று தீப்பெட்டிகள் பிரபலம். அதில், வெட்டுப்புலி தான் நன்றாக இருக்கும் என நம்பினார்கள். காரணம், அதற்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தை அந்தப் பெட்டியில் பதிவு செய்திருந்தார்கள். கையில் அரிவாளுடன் ஒருவர் பாய்ந்துவரும் சிறுத்தைப் புலியை நோக்கி ஓட, அவருக்கருகில் நாய் ஒன்றும் ஓடிவருவதாக அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். தனது நாயைத் தாக்கக் காட்டிலிருந்து வெளிவந்த சிறுத்தைப் புலி ஒன்று முயற்சிக்கும்போது அதனை எதிர்த்துத்

வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு

தமிழ்ஹிந்துவில் வெங்கட்சாமிநாதன் அவர்கள் வெட்டுப்புலி குறித்த ஆழ்ந்த விமர்சனம் இது. September 2, 2011 – வெங்கட் சாமிநாதன்    கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில், கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால்,

தமிழர்களின் ஆவணம்

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் 13JUL 2018 ஒன்பதாம் வகுப்பு வரை அத்தனை ஈர்ப்பு இருந்ததே இல்லை. அதற்குப் பின்னர், ஒன்பதாம் வகுப்பு வரை ஏன் தமிழைக் காதலிக்காமல் விட்டுத் தொலைத்தோம் என்றிருந்த அத்தனை இச்சைகளையும், சில நூறு நூல்கள் வாசித்தபின்பும் இன்றும் தீர்த்துக்கொள்ள முடியவே இல்லை. அப்படி என்னதான் காதல் என் மொழியின் மீது என்று என்னை நானே கேட்டுக்கொண்டதும் உண்டு. இரண்டு காரணங்கள். ஆம் இரண்டு தமிழாசிரியர்கள். ஒரு போதும் அவர்கள் தமிழைக் காதலிக்கச் சொன்னதே

நினைவிலே தமிழ் உள்ள மிருகம் – அ.மோகனா

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவலை முன்வைத்து… மொழி என்பது வெறுமனே பரிமாற்றக் கருவியாக மட்டும் இருப்பதில்லை. அது அதையும் தாண்டிய ஒரு முக்கிய வினையாக இருக்கிறது. மொழியின் அடிப்படையான வினைகளில் ஒன்று உடலை நிலத்துடன் பிணைப்பதே. அல்லது தனி உயிரியாக உள்ள மனிதனைச் சமூக உயிரியாக மாற்றுவதுதான். – ஜமாலன் (2003:207) Language is not a ‘nomenclature‚ that provides labels for pre – existing categories; it generates its own

திராவிட இயக்க வரலாற்று நாவல்

எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல் வீடியோ இரண்டு பாகங்களாக யூ ட்யூப்பில் பதிவேற்றியுள்ளோம்… https://youtu.be/e7Q7SF9UptQ https://youtu.be/Rk4YTsaUang

ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகிறது வெட்டுப்புலி

நிதி திரட்டும் பணி ஆரம்பம்… நிதி தருவோர் கீழே சொடுக்கவும். ஷேர் செய்து நண்பர்களிடம் கொண்டுபோய் சேர்க்கவும். நன்றி. https://www.impactguru.com/fundraiser/to-translate-my-book-vettupuli-in–english?utm_source=facebook&utm_campaign=To+translate+my+book+vettupuli+in++english&utm_medium=share

தாரகை

தமிழ் அரசியலில் சூழலில் சினிமா ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. நடிகர்கள் இல்லாமல் கடந்த அரை நூற்றாண்டாக தமிழக அரசியல் இல்லை. ஓரிரு படங்கள் ஓடிவிட்டாலே நடிகர்கள் தங்களை தமிழகத்தை ஆளும் தகுதி வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். தாரகை நாவலில் நாயகி தீபிகாவும் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தலைவி ஆகிறாள். யாருமற்ற அனாதையாக தமிழ் சினிமா உலகில் அடி எடுத்துவைத்து, பாதையில் பயணத்து, அவள் அடையும் இடம்… வெற்றிடமா? வெற்றி மகுடமா?  நூல்களைப் பெற…

ஆபரேஷன் நோவா

தமிழில் அறிவியல் புனைகதைகள் அருகி வருகின்றன. எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு ஏறத்தாழ அறிவியல் புனைகதையில் தேக்கநிலை. ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த ஆபரேஷன் நோவா தொடர் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது. டோபா எரிமலை வெடித்து பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேரப் போவதை விஞ்ஞானிகள் அறிகிறார்கள். மக்களைக் காப்பாற்றும் பணியில் பல சிக்கல்கள். உயிரினம் வாழ உகந்த கோள் ஒன்றில் மனிதர்கள் வாழ வழிசெய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை எனத் தெரியவர, சயின்டிஸ்ட் ஒருவர்

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்னும் கேள்வி சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல் அத்தகையது. தமிழ்மகனின் பல கதைகள் நம்பகத்தன்மையுடன் உணர்வுச் சிக்கல்களைப் பேசுகின்றன.   நூலைப் பெற..