Author: admin

படைவீடு நாவலுக்குப் பாராட்டு விழா

கவிஞர் எதிரொலி மணியன் அவர்கள் எடுக்கும் பாராட்டு விழா இது. திருவண்ணாமலையில் மாபெரும் அரங்கில் மகத்தான  முறையில் இதற்கான செயல்பாடுகள் செய்து  வருகிறார். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று விழா நடைபெறுகிறது.

ஆண்பால் பெண்பால் நாவல் குறித்து

Check p (நாவல்) (Tamil Edition) by தமிழ்மகன் தமிழ்மகன் https://www.amazon.in/dp/B089S8VJP6/ref=cm_sw_r_wa_awdb_t1_x453Eb491512F ஆணுலகத்தையும் பெண்ணுலகத்தையும் சற்று உளவியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொட்டுப் பார்க்கும் முயற்சி இது. இந்த எல்லா அம்சங்களிலும் அவர்களுக்குள் ஏராளமான முரண்பாடுகள் ஏற்படுகின்றன. ஒரு சம்பவத்தை ஆண் சொல்லிச் செல்வதற்கும் அதை பெண் சொல்லிச் செல்வதற்கும் சில தன்மை வேறுபாடுகள் உண்டு. ஒரு நாவலையே பெண்ணும் ஆணும் சொல்லிச் செல்லும் விதமாக இந்த நாவலைப் படைத்திருக்கிறேன். திருமண பந்தம் மட்டுமே

முன் வெளியீட்டுத் திட்டம்/ படைவீடு

களப்பிரர் காலம் போலவே விடுபட்டுப் போன ஒரு நூற்றாண்டின் கதை, படைவீடு.  தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழ் அரசர்களில் ஒருவரான சம்புவராயர்கள் ஆட்சியை விவரிக்கும் நாவல். சமயப் போர்களும் மொழிப்போரும் முப்புறமும் சூழ்ந்திருந்த நெருக்கடியான காலகட்டம்.  வரிகள் அற்ற, போர்கள் அற்ற அமைதியான ஆட்சியை நல்கியவர்கள்.

தென்னாப்பிரிக்கா முதல் தென் குமரி வரை… காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்!

 #Gandhi150 தமிழ்மகன் தமிழர்களுக்கு காந்தியையும் காந்திக்குத் தமிழர்களையும் அளவுக்கு அதிகமாகவே பிடித்துப்போனது. தமிழில் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. காந்தி மகாத்மா காந்திக்கும் தமிழருக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அது, தென்னாப்பிரிக்காவில் காந்தி வக்கீல் தொழிலைத் தொடங்கிய காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது.  தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியபோது அவருக்கு உறுதுணையாக இருந்து, ஆங்கிலேயர்களின் அடாவடித்தனங்களை எதிர்த்து சிறை சென்று உயிர் மாய்ந்த மூவரில் ஒருவரை நம்மில் பலருக்கும் தெரியும்… அவர் தில்லையாடி வள்ளியம்மை.

புலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி!

ஞாயிறு, 29 ஜூலை 2018 சிவா 1970களில் கோடாலி, வெண்புறா, வெட்டுப்புலி ஆகிய மூன்று தீப்பெட்டிகள் பிரபலம். அதில், வெட்டுப்புலி தான் நன்றாக இருக்கும் என நம்பினார்கள். காரணம், அதற்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தை அந்தப் பெட்டியில் பதிவு செய்திருந்தார்கள். கையில் அரிவாளுடன் ஒருவர் பாய்ந்துவரும் சிறுத்தைப் புலியை நோக்கி ஓட, அவருக்கருகில் நாய் ஒன்றும் ஓடிவருவதாக அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். தனது நாயைத் தாக்கக் காட்டிலிருந்து வெளிவந்த சிறுத்தைப் புலி ஒன்று முயற்சிக்கும்போது அதனை எதிர்த்துத்

வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு

தமிழ்ஹிந்துவில் வெங்கட்சாமிநாதன் அவர்கள் வெட்டுப்புலி குறித்த ஆழ்ந்த விமர்சனம் இது. September 2, 2011 – வெங்கட் சாமிநாதன்    கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில், கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால்,

தமிழர்களின் ஆவணம்

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் 13JUL 2018 ஒன்பதாம் வகுப்பு வரை அத்தனை ஈர்ப்பு இருந்ததே இல்லை. அதற்குப் பின்னர், ஒன்பதாம் வகுப்பு வரை ஏன் தமிழைக் காதலிக்காமல் விட்டுத் தொலைத்தோம் என்றிருந்த அத்தனை இச்சைகளையும், சில நூறு நூல்கள் வாசித்தபின்பும் இன்றும் தீர்த்துக்கொள்ள முடியவே இல்லை. அப்படி என்னதான் காதல் என் மொழியின் மீது என்று என்னை நானே கேட்டுக்கொண்டதும் உண்டு. இரண்டு காரணங்கள். ஆம் இரண்டு தமிழாசிரியர்கள். ஒரு போதும் அவர்கள் தமிழைக் காதலிக்கச் சொன்னதே

நினைவிலே தமிழ் உள்ள மிருகம் – அ.மோகனா

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவலை முன்வைத்து… மொழி என்பது வெறுமனே பரிமாற்றக் கருவியாக மட்டும் இருப்பதில்லை. அது அதையும் தாண்டிய ஒரு முக்கிய வினையாக இருக்கிறது. மொழியின் அடிப்படையான வினைகளில் ஒன்று உடலை நிலத்துடன் பிணைப்பதே. அல்லது தனி உயிரியாக உள்ள மனிதனைச் சமூக உயிரியாக மாற்றுவதுதான். – ஜமாலன் (2003:207) Language is not a ‘nomenclature‚ that provides labels for pre – existing categories; it generates its own

திராவிட இயக்க வரலாற்று நாவல்

எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல் வீடியோ இரண்டு பாகங்களாக யூ ட்யூப்பில் பதிவேற்றியுள்ளோம்… https://youtu.be/e7Q7SF9UptQ https://youtu.be/Rk4YTsaUang