எழுத்தாளர் தமிழ்மகன் @ மனம் ஆன்லைன் இதழில்  ‘மானுடப்பண்ணை’, ‘வெட்டுப்புலி’, ‘ஆண்பால் பெண்பால்’, ‘வனசாட்சி’, ‘ஆபரேஷன் நோவா’, ‘தாரகை’ என தொடர்ச்சியாக நாவல்களின் உலகத்தில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருபவர், தமிழ்மகன். எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு, அறிவியல் புனைக்கதைகளில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை அவரது ‘ஆபரேஷன் நோவா’ நாவல் நிரப்பியது. வேற்றுகிரகத்தில் தண்ணீர் உண்டு, அங்கே மனிதர்கள் வாழ முடியும். அப்படி வாழ நேர்ந்தால் என்னவாகும்? ஹாலிவுட் படங்களே தோற்றுப்போகும் வகையில் சுவாரஸ்யமாக எழுதியிருந்தார் தன் நாவலில். பிறகு,