Tag: தமிழ்மகன்

வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு

தமிழ்ஹிந்துவில் வெங்கட்சாமிநாதன் அவர்கள் வெட்டுப்புலி குறித்த ஆழ்ந்த விமர்சனம் இது. September 2, 2011 – வெங்கட் சாமிநாதன்    கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில், கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால்,

தமிழர்களின் ஆவணம்

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் 13JUL 2018 ஒன்பதாம் வகுப்பு வரை அத்தனை ஈர்ப்பு இருந்ததே இல்லை. அதற்குப் பின்னர், ஒன்பதாம் வகுப்பு வரை ஏன் தமிழைக் காதலிக்காமல் விட்டுத் தொலைத்தோம் என்றிருந்த அத்தனை இச்சைகளையும், சில நூறு நூல்கள் வாசித்தபின்பும் இன்றும் தீர்த்துக்கொள்ள முடியவே இல்லை. அப்படி என்னதான் காதல் என் மொழியின் மீது என்று என்னை நானே கேட்டுக்கொண்டதும் உண்டு. இரண்டு காரணங்கள். ஆம் இரண்டு தமிழாசிரியர்கள். ஒரு போதும் அவர்கள் தமிழைக் காதலிக்கச் சொன்னதே

நினைவிலே தமிழ் உள்ள மிருகம் – அ.மோகனா

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவலை முன்வைத்து… மொழி என்பது வெறுமனே பரிமாற்றக் கருவியாக மட்டும் இருப்பதில்லை. அது அதையும் தாண்டிய ஒரு முக்கிய வினையாக இருக்கிறது. மொழியின் அடிப்படையான வினைகளில் ஒன்று உடலை நிலத்துடன் பிணைப்பதே. அல்லது தனி உயிரியாக உள்ள மனிதனைச் சமூக உயிரியாக மாற்றுவதுதான். – ஜமாலன் (2003:207) Language is not a ‘nomenclature‚ that provides labels for pre – existing categories; it generates its own

திராவிட இயக்க வரலாற்று நாவல்

எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல் வீடியோ இரண்டு பாகங்களாக யூ ட்யூப்பில் பதிவேற்றியுள்ளோம்… https://youtu.be/e7Q7SF9UptQ https://youtu.be/Rk4YTsaUang

தாரகை

தமிழ் அரசியலில் சூழலில் சினிமா ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. நடிகர்கள் இல்லாமல் கடந்த அரை நூற்றாண்டாக தமிழக அரசியல் இல்லை. ஓரிரு படங்கள் ஓடிவிட்டாலே நடிகர்கள் தங்களை தமிழகத்தை ஆளும் தகுதி வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். தாரகை நாவலில் நாயகி தீபிகாவும் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தலைவி ஆகிறாள். யாருமற்ற அனாதையாக தமிழ் சினிமா உலகில் அடி எடுத்துவைத்து, பாதையில் பயணத்து, அவள் அடையும் இடம்… வெற்றிடமா? வெற்றி மகுடமா?  நூல்களைப் பெற…

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்னும் கேள்வி சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல் அத்தகையது. தமிழ்மகனின் பல கதைகள் நம்பகத்தன்மையுடன் உணர்வுச் சிக்கல்களைப் பேசுகின்றன.   நூலைப் பெற..

“திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”

தோழர் மு.வி.நந்தினி, தோழர் பீட்டர் துரைராஜ் ஆகியோர்  த டைம்ஸ் தமிழ்.காமுக்கு எடுத்த நேர்காணல்! சினிமா பத்திரிகையாளர், அறிவியல் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதாசிரியர் என பன்முகத்துடன் எழுதி வருபவர் தமிழ்மகன். இரண்டு கவிதை நூல்கள், ஐந்து சிறுகதை தொகுதி, பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், அறிவியல் கட்டுரை தொகுப்பு, சினிமா தொடர்பான ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் என இவருடைய எழுத்துழைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது.  இதுவரை வெளியான இவருடைய நூல்களில் ஆகச்சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுவது திராவிட இயக்க பின்னணியில் எழுத்தப்பட்ட ‘வெட்டுப்புலி’ நாவலே!

ஆண்பால் பெண்பால்

நாவல் எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண் – பெண் பாகுபாடு போல இல்லை, மனிதர்களில் உள்ள பால் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துகள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி, எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு கையெழுத்து, குரல், சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். ஆண்பால் பெண்பால் நாவல் அந்த அற்புத முரண்பாட்டை படைப்பிலக்கியத்தின் வழியே

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்

‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்ற ஆர்வம் அநேகருக்கு உண்டு. கடந்த நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் தமிழ் வளர்த்தச் சான்றோர்களின் தலைசிறந்த சிறுகதையையும் சிறுகதை எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கும் இந்த நூல், வாசகர்களுக்கான சிறுகதைக் களஞ்சியம்! பாரதியார், வ.வே.சு. ஐயர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி,