Tag: 20-ம் நூற்றாண்டின் சிறந்த நாவல்

வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு

தமிழ்ஹிந்துவில் வெங்கட்சாமிநாதன் அவர்கள் வெட்டுப்புலி குறித்த ஆழ்ந்த விமர்சனம் இது. September 2, 2011 – வெங்கட் சாமிநாதன்    கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில், கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால்,

தமிழர்களின் ஆவணம்

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் 13JUL 2018 ஒன்பதாம் வகுப்பு வரை அத்தனை ஈர்ப்பு இருந்ததே இல்லை. அதற்குப் பின்னர், ஒன்பதாம் வகுப்பு வரை ஏன் தமிழைக் காதலிக்காமல் விட்டுத் தொலைத்தோம் என்றிருந்த அத்தனை இச்சைகளையும், சில நூறு நூல்கள் வாசித்தபின்பும் இன்றும் தீர்த்துக்கொள்ள முடியவே இல்லை. அப்படி என்னதான் காதல் என் மொழியின் மீது என்று என்னை நானே கேட்டுக்கொண்டதும் உண்டு. இரண்டு காரணங்கள். ஆம் இரண்டு தமிழாசிரியர்கள். ஒரு போதும் அவர்கள் தமிழைக் காதலிக்கச் சொன்னதே

வெட்டுப்புலி

தமிழ் நாவல் உலகில் சமகால சரித்திரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஆச்சர்யமான நாவல். திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, தமிழ்ச் சினிமா உலகின் வளர்ச்சி ஆகியவற்றோடு வெட்டுப்புலி தீப்பெட்டியின் வளர்ச்சியை இணைத்துப் பின்னப்பட்ட விறுவிறுப்பான புனைவின் வழியே 20-ம் நூற்றாண்டின் தமிழ் மக்களின் மனசாட்சியைப் படம் பிடிக்கிறது இந்த நாவல். ஏராளமான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் எதிர்கொண்டது. எழுத்தாளர்கள் வெங்கட்சாமிநாதன், எஸ்.வி.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், இமையம், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பெரும் எழுத்தாளுமைகள் வெகுவாகப் பாராட்டினர். வலைதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் வெளிவந்ததே